MARC காட்சி

Back
காரைக்கால் அம்மையார்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a காரைக்கால் அம்மையார்
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a தமக்கொரு தந்தையும் தாயுமின்றி தானே உதித்த தகைமையான் அம்மையே என விளித்த அருட்பெருங் கடலாகிய காரைக்கால் அம்மையார்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a காரைக்கால் அம்மையாரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருத்தொண்டத்தொகையுள் ‘பேயார்’ என்று குறித்துள்ளார். இவர் அருள் வரலாறு பெரியபுராணத்துள் விரித்துரைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானால் ‘அம்மையே’என்று அழைக்கப் பெற்ற பெருமை மிக்கவர். காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். இவர் காலம் கி.பி.300-500 ஆகும். இவர் இயற்றிய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் அமைந்தன. கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். நாகை மாவட்டம் காரைக்காலில் பிறந்த புனிதவதியார் வணிகர் பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தார். தன் இளம் பிராயம் முதல் சிவபெருமானின் மீது நீங்காத அன்பு கொண்டவர். ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்றார். நடந்ததை கணவன் அறிந்து, இவர் தெய்வப் பெண்டிர் என்றறிந்து விலகி, மறுமணஞ் செய்து, தன் பெண் குழந்தைக்கு அவ்வம்மையாரின் பெயரையே சூட்டி, தன்னைக் காண வந்த புனிதவதியின் கால்களிலும் வீழ்ந்து பணிய, இறைவனின் திருவுள்ளத்தை இனிதறிந்த புனிதவதியார் பேயுடற் வேண்டிப் பெற்று, இறைவன் உறையும் மலையென்று கால்களாற் நடக்கவஞ்சி, தலைகீழாய் கயிலாயம் செல்கிறார். இக்காட்சியே இங்கு வடிக்கப்பட்டுள்ளது.
653 : _ _ |a காரைக்கால் அம்மையார், காரைக்கால் பேய், புனிதவதியார், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
905 : _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
914 : _ _ |a 10.94856342
915 : _ _ |a 79.35650614
995 : _ _ |a TVA_SCL_000362
barcode : TVA_SCL_000362
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000362_தாராசுரம்-ஐராவதேஸ்வரர்-கோயில்_காரைக்கால்-அம்மையார்-001.jpg